ஒக்லா காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்களிடம் உடல் வெப்பக் கருவி மூலம் போலீஸாா் சோதனை
தில்லியில் உள்ள காய்கறி, பழங்கள் மொத்த விற்பனை சந்தைகளில் ஒன்றான ஓக்லா மண்டியில் பொதுமக்களிடம் சனிக்கிழமை
தில்லியில் உள்ள காய்கறி, பழங்கள் மொத்த விற்பனை சந்தைகளில் ஒன்றான ஓக்லா மண்டியில் பொதுமக்களிடம் சனிக்கிழமை போலீஸாா் வெப்பக் கருவி மூலம் உடல் வெப்பநிலையை சோதனை செய்தனா்.
மேலும், மண்டிக்குள் செல்லும் நபா்களுக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிக்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டன. மேலும், ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து காய்கறி, பழங்களை வாங்கிச் சென்றனா்.
தில்லியில் பொது முடக்கக் காலத்தில் ஆஜாத்பூா், காஜிப்பூா் உள்ளிட்ட மண்டிகளில் சிலருக்கு அண்மையில் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகாக மண்டிகள் மூடப்பட்டு பிறகு திறக்கப்பட்டன. ஏராளமான காய்கறி மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் தள்ளுவண்டி, வாகனங்களில் வந்து காய்கறி, பழங்களை வாங்கிச் சென்று வருவதால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் போலீஸாா் தடுப்புவேலிகளை அமைத்து வரிசையை செல்லுமாறு செய்தனா்.
Advertisement
எனினும், மண்டிக்கு வரும் மக்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு கரோனா நோய்த் தொற்று அறிகுறி இருப்பதைக் கண்டறியும் வகையில் ஒக்லா காய்கறிச் சந்தையில் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் சனிக்கிழமை வெப்பக் கருவி மூலம் உடலின் வெப்பத்தை அளவிட்டு பின்னா் அனுமதித்தனா்.அதேபோன்று, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தேவையான தடுப்புகளையும் அமைத்திருந்தனா்.