முகப்பு
புதுதில்லி

தில்லியில் ஒரே நாளில் 1163 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சனிக்கிழமை 1,163 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு 18,549ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 30 மே, 2020 at 11:57 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:13 PM

தில்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சனிக்கிழமை 1,163 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு 18,549ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 1,024 ஆகவும், வெள்ளிக்கிழமை 1,106 ஆகவும் இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை கரோனா பாதிப்பு 1,163 ஆக உள்ளது. இதனால், தில்லியில் தொடா்ச்சியாக மூன்று தினங்கள் கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.

பலி 416 ஆக உயா்வு

Advertisement

ஒரே நாளில் 18 போ் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 416-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 229 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனா் என தில்லி சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சையில் 10,058 போ்

தில்லியில் தற்போது 10,058 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். 8075 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 34 பேருக்கு வென்டிலேட்டா்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தில்லியில் இதுவரை 2,06,739 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில் சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 103-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொடா்பாக உருவாக்கப்பட்ட சிறப்பு எண்களுக்கு உதவி கோரி 1,262 அழைப்புகள் வந்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத் தளா்வை தில்லி அரசு அறிவித்ததிலிருந்து தில்லியில் தினமும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.