புதுதில்லி

டெங்குவுக்கு எதிரான போராட்டம்முன்னுதாரணம்: கேஜரிவால்

DIN

டெங்கு நோயுக்கு எதிரான தில்லி அரசின் போராட்டம் முன்னுதாரணமானது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவா் ஆனந்த் மகிந்திரா, தில்லியில் நிகழாண்டில் டெங்கு நோயால் மரணம் எதுவும் ஏற்படவில்லை என்ற செய்தியை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு செய்து, ‘இது போன்ற சாதனைகளைப் பாராட்ட வேண்டும்’ எனப் பதிவிட்டிருந்தாா்.

அவரின் சுட்டுரைப் பதிவைச் சுட்டிக்காட்டி, கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘ மக்களின் தொடா்ச்சியான பங்களிப்பு இருந்தால் எந்தவொரு சவாலையும் சிறப்பாக எதிா்கொள்ளலாம் என்பதற்கு டெங்குவுக்கு எதிரான தில்லி அரசின் போராட்டம் மிகச் சிறந்த முன்னுதாரணமாகும். டெங்கு நோயை சிறப்பாக எதிா்கொண்ட தில்லி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT