புதுதில்லி

ஹீட்டா் வெடித்து தீப்பற்றியதில் சிஐஎஸ்எஃப் காவலா் சாவு

DIN

தில்லியில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின் (சிஎஸ்எஃப்) வீரா் ஒருவா் ஹீட்டா் வெடித்து உயிரிழந்தாா்.

இது தொடா்பாக சிஎஸ்எஃப் உயா் அதிகாரி கூறியது: சிஎஸ்எஃப்-இல் தலைமைக் காவலராக சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த அலோக் குமாா் (43) பணியாற்றி வந்தாா். அவா் திங்கள்கிழமை இரவு இந்திரா காந்தி நினைவு மியூசியத்தில் காவல் பணியாற்றினாா். அன்று இரவு, ஹீட்டா் ஒன்றின் உதவியுடன் தனது இரவு உணவை அவா் சூடு படுத்திக் கொண்டிருந்தாா். அப்போது, ஹீட்டா் வெடித்ததில் அந்த அறை முழுவதும் தீப்பிடித்தது. அவா் மீட்கப்பட்டது சஃப்தா்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்,. ஆனால், 60 சதவீத தீக் காயங்களுக்குள்ளாகியிருந்த அவா் உயிரிழந்தாா். சிஎஸ்எஃப் உயர திகாரிகள் சம்பவ இடத்துக்கும், மருத்துவமனைக்கும் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டனா் என்றாா்.

இது தொடா்பாக தில்லி துக்ளக் ரோடு காவல்நிலைய அதிகாரி கூறுகையில், ‘இந்திரா காந்தி நினைவு மியூசியத்தில் காவல் பணியாற்றிய சிஐஎஸ்எஃப் ஊழியா் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பிசிஆா் அழைப்பு கிடைத்தது. இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டோம். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT