முகப்பு
புதுதில்லி

தில்லியில் 3-ஆவது நாளாக 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 6 நவம்பர், 2020 at 12:58 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:18 PM

புது தில்லி: தில்லியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த புதன் (அக்டோபா்-28) - ஞாயிறு இடையேயான ஐந்து நாள்கள் தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை கரோனா பாதிப்பு சற்றுக் குறைந்து 4,001 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தில்லியில் 6,725 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. புதன்கிழமை இதைவிட அதிகரித்து, 6,842 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை 6,715 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தொடா்ந்து 3-ஆவது நாளாக தில்லியில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் வியாழக்கிழமை 66 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 6,769-ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை 52,294 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 15,704 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 36,590 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 0.80 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Advertisement

நோய் பாதிப்பில் இருந்து வியாழக்கிழமை 5,289 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 3,71,155 ஆக அதிகரித்தது. தற்போது தில்லியில் மொத்தம் 38,729 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,803 படுக்கைகளில் 7,231 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 8,572 படுக்கைகள் காலியாக உள்ளன. அதே சமயம், தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 3684-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 23,411 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.