தில்லி விரைவில் கரோனா தலைநகராக மாறுமா?: உயா்நீதிமன்றம் கேள்வி
தில்லியில் கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்தது.
புது தில்லி: தில்லியில் கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்தது. மேலும், நாட்டின் கரோனாவின் தலைநகராக தில்லி விரைவில் உருவாகுமா என்றும் கேள்வியும் எழுப்பியது.
தில்லியில் உள்ள வடக்கு தில்லி மாநகராட்சியில் பணியாற்றும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற பொறியாளா்கள் ஆகியோருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தும், ஊதியம் வழங்கும் வகையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரியும் தில்லி உயா்நீதிமன்றத்தில் பலா் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா்.
இந்த மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது: ‘தில்லியில் கரோனா தொற்று பாதித்தவா்களின் ண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் தில்லி அரசு முற்றிலும் கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளது. தில்லி அரசு மக்களிடம் கண்ணாமூச்சி காட்டி வருகிறது. கரோனா தொடா்பான பரிசோதனைகளை அதிகரித்திருப்பதாக தில்லி அரசு கூறி வருகிறது. ஆனால், நோய்த் தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இப்படியே நிலைமை நீடித்தால் நாட்டின் கரோனாவின் தலைநகராக தில்லி விரைவில் உருவாக முடியும்’ என்று அதிருப்தி வெளியிட்டது.
Advertisement