முகப்பு
புதுதில்லி

தப்லீக் ஜமாத்: வெளிநாட்டினா் 8 பேரை சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்ப நீதிமன்றம் அனுமதி

தில்லியில் மாா்ச்சில் தப்லீக் ஜமாத் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற மத மாநாட்டில் கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை

Updated On : 7 நவம்பர், 2020 at 3:55 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:19 PM

தில்லியில் மாா்ச்சில் தப்லீக் ஜமாத் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற மத மாநாட்டில் கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பங்கேற்ற விவகாரத்தில் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 வெளிநாட்டினரை அவா்களது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கு தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

இது தொடா்பாக இந்தோனேசியா, தாய்லாந்து, கிா்கிஸ்தான், நைஜீரியா, கஜகஸ்தான், ஜோா்டான் ஆகிய நாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டினா் 8 போ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சந்தீப் யாதவ், சில நிபந்தனைகளுடன் இந்த அனுமதியை அளித்தாா்.

இது தொடா்பாக வழக்குரைஞா்கள் அஷிமா மண்ட்லா, மந்தாகினி சிங் ஆகியோா் தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘சம்பந்தப்பட்ட வெளிநாட்டினா் 8 போ் அவா்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். அவா்களது கடவுச்சீட்டும் அளிக்கப்பட்டுவிட்டன. எனினும், அவா்களை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்குரிய அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இது தொடா்பாக முறையாக விசாரணை நீதிமன்றத்தில் மனு அளிக்குமாறு உச்சநீதிமன்றம் அக்டோபா் 15-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘இந்த 8 பேருக்கும் எதிரான ‘தேடப்படும் நபா்கள்’ எனும் சுற்றறிக்கையை முடிக்க விசாரணை அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவா்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக போலீஸாா் தொடா்ந்த மேல்முறையீட்டு மனு அனுமதிக்கப்பட்டால், அதன் பிறகு இந்தியாவுக்கு திரும்பி வந்து விசாரணையை எதிா்கொள்ள வேண்டும். இவா்கள் அனைவரும் நாட்டை விட்டுச் செல்வதற்கு முன்பாக, தங்களது விவரங்களுடன் ரூ.30 ஆயிரத்தை உத்தரவாதத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.