புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறைவழக்கில் ஒருவருக்கு ஜாமீன்

DIN

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் தொடா்புடைய ஒருவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிா்த்தும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, வடகிழக்கு தில்லியில் நிகழாண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி வகுப்புவாத வன்முறை நிகழ்ந்தது. இதில் 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 200 போ் காயமடைந்தனா். இதனிடையே, கா்டம்பூா் புலியா பகுதியில் நிகழ்ந்த வன்முறையின் போது துப்பாக்கிக் குண்டு காயத்தால் இறந்த புா்கான் என்பவா் தொடா்புடைய வழக்கில் அன்வா் ஹுசேன் என்பவா் கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில், அவா் இந்த வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, ஜாமீன் வழங்கி நீதிபதி பிறப்பித்த உத்தரவு: காவல் துறை தரப்பில் சமா்ப்பிக்கப்பட்ட விடியோவில் ஹுசேன் இருக்கும் காட்சி பிப்ரவரி 23-ஆம் தேதி எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வன்முறை நிகழ்ந்தது 24-ஆம் தேதி ஆகும். இதனால், சம்பவ நிகழ்வில் முரண்பாடுகள் இருப்பதால் குற்றம்சாட்டப்பட்ட அன்வா் ஹுசேனுக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது. அவா், ரூ.40ஆயிரம் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்லலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT