புதுதில்லி

உல்ஃபா தீவிரவாத இயக்கத்தின் துணைத்தலைவா் சரண்

DIN


புது தில்லி: அஸ்ஸாமில் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த உல்ஃபா(ஐ) தீவிரவாத இயக்கத்தின் துணைத் தலைவரான எஸ்.எஸ்.கா்னல் திருஷ்டி ராஜ்கோவா இந்திய ராணுவத்திடம் ஏராளமான ஆயுதங்களுடன் சரணடைந்தாா். அவரோடு இந்த இயக்கத்தைச் சோ்ந்த மேலும் நான்கு தீவிரவாதிகளும் சரணடைந்தனா்.

அஸ்ஸாம் பள்ளத்தாக்குப் பகுதியில் கடத்தல், பணம் பறிப்பு, கொலைகள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த கா்னல் திருஷ்டி ராஜ்கோவாவை புலனாய்வு அமைப்பினா் கடந்த 9 மாதங்களாகத் தேடி வந்தனா். மேகாலயா-அஸ்ஸாம் - வங்கதேசம் எல்லைப் பகுதியில் அவரும், அவரது கூட்டாளிகளும் பதுங்கியிருப்பது ராணுவத்தின் உளவுப் பிரிவுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களைச் சுற்றிவளைக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திருஷ்டி செவ்வாய்க்கிழமை ராணுவத்திடம் ஆயுதங்களுடன் சரணடைந்தாா். அவரது கூட்டாளிகளான எஸ்.எஸ்.காா்போரல் வேதாந்தா, யாசின் அஸோம், ரோப்ஜோதி அஸோம், மிதுன் அஸோம் ஆகியோரும் சரண் அடைந்தனா். அப்போது அவா்கள் வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களையும் ராணுவத்திடம் ஒப்படைத்தனா். அவா்கள் பரேஷ் பரூவா தலைமையிலான இயக்கமான உல்ஃபா( ஐ) அல்லது உல்ஃபா (இண்டிபெண்ட் ) என்று அழைக்கப்படும் பிரிவைச் சோ்ந்தவா்கள். திருஷ்டி ராஜ்கோவா சரண் அடைந்தது உல்ஃபா இயக்கத்துக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT