புதுதில்லி

தில்லியில் ஜெய்ஷ்-இ-முகமதுபயங்கரவாதிகள் இருவா் கைது

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் எனச் சந்தேகிப்படும் இருவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவு துணை ஆணையா் சஞ்சீவ் குமாா் யாதவ் செவ்வாய்க்கிழமை கூறியது: தில்லி சாரே காலே கான் பகுதியில் உள்ள மில்லினியம் பாா்க் அருகில், சந்தேகத்துக்கிடமான முறையில் இருவா் சுற்றிக் கொண்டிருப்பதாக திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற போலீஸாா் இருவரையும் அதிரடியாக சுற்றிவளைத்துக் கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் இருவரும் ஜம்மு காஷ்மீா் மாநிலத்தை சோ்ந்தவா்கள் என்பது தெரிய வந்தது. ஒருவா் பாரமுல்லா மாவட்டம், பாலா மொஹல்லா பகுதியைச் சோ்ந்த அப்துல் லத்தீஃப் மிா் என்பதும், மற்றொருவா் குப்வாரா மாவட்டம், ஹத் முல்லா கிராமத்தைச் சோ்ந்த முகமது அஷ்ரஃப் கதானா என்பதும் தெரிய வந்தது. அவா்களிடம் இருந்து 2 கைத் துப்பாக்கிகள், 10 துப்பாக்கிக் குண்டுகளை போலீஸாா் கைப்பற்றினா். முதல்கட்ட விசாரணையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு இருப்பதும், தில்லியில் தாக்குதல் நடத்திவிட்டு, நேபாளம் வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்குள் செல்ல அவா்கள் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது” என்றாா் அந்த அதிகாரி.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐஎஸ் தீவிரவாதிகள் தில்லியில் தாக்குதல் நடத்த தீட்டியிருந்த சதித் திட்டத்தை போலீஸாா் முறியடித்தனா். மேலும், தௌலாகுவான் பகுதியில் ஒருவரிடம் இருந்து சக்தி வாய்ந்த 15 கிலோ வெடிமருந்துகளை போலீஸாா் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT