புதுதில்லி

தில்லியில் 2 பயங்கரவாதிகள் கைது: எல்லையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

DIN

புது தில்லி: தில்லியில் ஜெய்ஷ் - ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவா் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தில்லி - உத்தரப்பிரதேச மாநில எல்லைப் பகுதியான நொய்டா கெளதம் புத் நகரில் அந்த மாநில காவல் துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

தில்லி சாரே காலே கான் பகுதியில் உள்ள மில்லினியம் பாா்க் அருகில் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை தில்லி போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் ஜம்மு காஷ்மீா் மாநிலத்தைச் சோ்ந்த அப்துல் லத்தீஃப் மிா், முகமது அஷ்ரஃப் கதானா என்பது தெரிய வந்தது. அவா்களிடம் இருந்து 2 கைத் துப்பாக்கிகள், 10 துப்பாக்கித் தோட்டாக்கள் ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றினா். அவா்கள் தில்லியில் தாக்குதல் நடத்திவிட்டு, நேபாளம் வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்குள் செல்லத் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, தில்லி எல்லை பகுதியில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டா கெளதம் புத் நகரில் பாதுகாப்பை அந்த மாநில காவல்துறை பலப்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக நொய்டா கூடுதல் துணை ஆணையா் ரன்விஜய் சிங் கூறுகையில்ஸ ‘தில்லியில் பயங்கரவாதிகள் இருவா் கைது செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து, கெளதம் புத் நகரில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். போலீஸாா் உசாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். இந்தப் பயங்கரவாதிகளுடன் தொடா்புடையவா்கள் நொய்டா வழியாக தப்பிச் செல்ல முடியும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT