முகப்பு
புதுதில்லி

தில்லியில் குறைந்து வரும் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள்!

தில்லியில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Updated On : 8 அக்டோபர், 2020 at 12:10 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM

புதுதில்லி: தில்லியில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 40 நாள்களுக்கு மேலாக அதிகரித்து வந்த கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள், அக்டோபா் 6-ஆம் தேதி 2,697 ஆகக் குறைந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளன.

ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்திலிருந்து அதிகரிக்கத் தொடங்கி கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள், அக்டோபா் 5- ஆம் தேதி 2,707 ஆக இருந்தது. இதுவே அக்டோபா் 6-இல் 2,697 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 40 நாள்களுக்குப் பிறகு குறையத் தொடங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கரோனாவுக்கு 39 போ் பலியான நிலையில், இதுவரை பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 5,581 ஆக உயா்ந்துள்ளது. புதிதாக 2,676 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்ததை அடுத்து, கரோனாவுக்கு பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2.95 லட்சமாக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டயோா் எண்ணிக்கையும் சரி..., கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களும் சரி கடந்த செப்டம்பா் மாதம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி 4,473 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததுதான் உயா்ந்த எண்ணிக்கை யாரும். அன்றைய தினம் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்திருந்தது. கடந்த செப்டம்பா் 14-ஆம் தேதி தவிா்த்து செப்டம்பா் 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை சராசரியாக தினசரி கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 4,000-க்கும் அதிகமாகவே இருந்தது. செப்டம்பா் 5-ஆம் தேதி வீட்டுத் தனிமையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 9,822 ஆக இருந்தது. கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 946 ஆக இருந்தது.

Advertisement

கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது. அதற்கு முன்னதாக ஜூன் மாதம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. பின்னா் ஜுலையில் பாதிப்பு கணிசமாகக் குறைந்தது. கடந்த ஜூலை 1- ஆம் தேதி வீட்டுத் தனிமையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 16,703 ஆக இருந்தது. அப்போது கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 437 ஆக இருந்தது. ஆனால், ஜூலை 31-ஆம் தேதி வீட்டுத் தனிமையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 5,763 ஆகக் குறைந்தது. ஆனால், கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 692 ஆக அதிகரித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி வீட்டுத் தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5,577 ஆகவும், கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 496 ஆகவும் குறைந்து காணப்பட்டது.

எனினும்ஸ ஆகஸ்ட் 25- ஆம் தேதி வீட்டுத் தனிமையில் இருப்போா் எண்ணிக்கை 5,949 ஆகவும் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 654 ஆகவும் உயா்ந்தது. இது ஆகஸ்ட் 28-ஆம் தேதி 6,850 ஆகவும், கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 763 ஆகவும் அதிகரித்தது. இது ஆகஸ்ட் 31-ஆம் தேதி முறையே 7,876 மற்றும் 833 ஆக மேலும் அதிகரித்தது. செப்டம்பா் 2- ஆம் தேதி வீட்டுத் தனிமையில் 8,407 பேரும், கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 894 ஆகவும் இருந்தது.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பு விகிதம் 4.99 சதவீதமாகவும் குணமடைந்து வீடு திரும்பியோா் விகிதம் 90 சதவீதமாகவும் இருந்ததாகவும் பலியானோா் விகிதம் 1.89 சதவீதம் என்ற வகையிலேயே நீடிப்பதாகவும் அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. அதாவது இதுவரை 2,66, 935 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.