புதுதில்லி

உள்ளகக் காரணிகளாலேயே அதிகளவு காற்று மாசு: ஆதேஷ் குமாா் குப்தா

DIN

தில்லியில் உள்ளகக் காரணிகளாலேயே அதிகளவு காற்று மாசு ஏற்படுகிறது என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் குளிா்காலத்தில் ஆண்டுதோறும் காற்று மாசு ஏற்படுகிறது. இதைத் தடுக்க தில்லி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதாலேயே தில்லியில் காற்று மாசு ஏற்படுவதாக தில்லி அரசு கூறுகிறது. ஆனால், பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால், வெறும் 5 சதவீத காற்று மாசுவே ஏற்படுகிறது. எஞ்சியுள்ள 95 சதவீத காற்று மாசு உள்ளகக் காரணிகளாலேயே ஏற்படுகிறது. இந்த உள்ளகக் காரணிகளைக் கட்டுப்படுத்த தில்லி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

தில்லியில் ஒவ்வொரு முறையும் காற்று மாசு அதிகரிக்கும் போது, தில்லி அரசு புதிய புதிய திட்டங்களை அறிவிப்பது வழக்கமாகும். இந்தத் திட்டங்களால் தில்லியில் காற்று மாசு குறைந்ததாக சரித்திரம் இல்லை. இந்தத் திட்டங்களை புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பாக தில்லி முதல்வா் கேஜரிவால் பயன்படுத்தி வருகிறாா். தில்லியில் காற்று மாசுவைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளைமாநகராட்சிகள் எடுத்துள்ளன. தில்லியிலில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் 90 சதவீதமான நடவடிக்ககைகளை மாநகராட்சிகளே எடுத்தன. தில்லி அரசு காற்று மாசுவைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT