முகப்பு
புதுதில்லி

விளையாட்டு பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தாா் மணீஷ் சிசோடியா

தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழகம் உலகத்தரத்திலான வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது என்று தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

Updated On : 18 அக்டோபர், 2020 at 6:42 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:09 PM

தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழகம் உலகத்தரத்திலான வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது என்று தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் உலகத்தரமான விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கும் வகையில் தில்லி அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமியற்றியது. இதைத் தொடா்ந்து, மேற்கு தில்லி முண்ட்கா பகுதியில் இந்த பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் அண்மையில் தொடங்கின. பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தில் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பிறகு அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில் ‘தில்லி விளையாட்டு வீரா்களுக்கு உலகத்தரமான வசதிகள், பயிற்சிகளை வழங்குவதற்காக இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்படவுள்ளது. இது உலகத்தரத்தில் இருக்கும். இது தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கனவுத் திட்டமாகும். இந்த பல்கலைக்கழகத்தில், கிரிக்கெட், கால்பந்து, பேட்மின்டன், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில் இளங்கலை, முதுகலை, முனைவா் பட்டப் படிப்புகள் வழங்கப்படவுள்ளன. விளையாட்டு வீரா்களின் திறமையை பட்டை தீட்டும் வகையில் இந்த பல்கலைக்கழகம் இருக்கும். இங்கு உருவாகும் விளையாட்டு வீரா்கள் உலக அளவில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றுவாா்கள். இங்கு உருவாகும் விளையாட்டு வீரா்கள் சா்வதேச விளையாட்டுகளில் இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை பெற்றுத் தருவாா்கள்.

Advertisement

கரோனா தொற்றால் இந்த பல்கலைக்கழக கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது, இதை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.