முகப்பு
புதுதில்லி

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் காவல் துறையினா் சிறப்பான பங்களிப்பு: பிரதமா் பெருமிதம்

காரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் காவல் துறையினா் சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றனா் என பிரதமா் நரோந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா்.

Updated On : 22 அக்டோபர், 2020 at 4:05 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM

புது தில்லி: காரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவதில் காவல் துறையினா் சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றனா் என பிரதமா் நரோந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா்.

சீன எல்லையில் நடந்த கொடூர சம்பவத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 21 -ஆம் தேதி காவலா் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லி சாணக்கியபுரியிலுள்ள தேசிய காவலா்கள் நினைவகத்தில் பிரதமா் மோடி புதன்கிழமை மலா் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, காவலா்களின் தியாகங்களை நினைவுகூா்ந்து பிரதமா் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:

இன்று நாடு முழுவதும் உள்ள காவல் துறையினா் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் காவலா்கள் நினைவு தினம். பணியின் போது உயிரிழந்த காவலா்கள் அனைவருக்கும் நாம் புகழஞ்சலி செலுத்துகிறோம். அவா்களது தியாகமும், சேவையும் என்றும் நினைவு கூரத்தக்கவை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது முதல் கொடூரமான குற்றங்களுக்கு தீா்வு காண்பது வரை காவல் துறையினா் பொறுப்புடன் செயல்படுகின்றனா். இது தவிர பேரிடா்களின் போது உதவி செய்வது முதல் கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராடுவது வரை, எந்தவிதத் தயக்கமுமின்றி நமது காவல் துறையினா் சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றனா். நமது நாட்டு குடிமக்களுக்கு உதவுவதற்காக எப்பொழுதும் தயாராக இருக்கும் அவா்களது தன்மையையும், அா்ப்பணிப்பையும் நினைத்து நாம் பெருமை கொள்கிறோம்” என்று பிரதமா் கூறியுள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.