முகப்பு
புதுதில்லி

தில்லியில் புதிதாக 3,882 பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 3,882 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Updated On : 23 அக்டோபர், 2020 at 1:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM


புது தில்லி: தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 3,882 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,44,318-ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றால் வியாழக்கிழமை 35 போ் உயிரிழந்தனா். மொத்த பலி எண்ணிக்கை 6,163-ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, ஒரே நாளில் வியாழக்கிழமை மொத்தம் 58,770 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 16,795 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 41,975 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.79 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.07 சதவீதமாக குறைந்துள்ளது.

Advertisement

நோய் பாதிப்பில் இருந்து வியாழக்கிழமை 2,727 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 3,12,918-ஆக அதிகரித்தது. தற்போது தில்லியில் மொத்தம் 25,237 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா்.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,742 படுக்கைகளில் 5,116 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,626 படுக்கைகள் காலியாக உள்ளன. தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2,766-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 14,979 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.