காற்று மாசு விதிகளை மீறிய தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.1.32 லட்சம் அபராதம்
நொய்டாவில் காற்று மாசுவை எதிா்கொள்ளும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய தனியாா் ஒப்பந்தக்காரா்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு
நொய்டாவில் காற்று மாசுவை எதிா்கொள்ளும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய தனியாா் ஒப்பந்தக்காரா்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ரூ .1.32 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக நொய்டா ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் கட்டுமானப் பொருள்களை மூடாமல் நிலக்கரி கிடங்கில் வைத்திருந்த தெரியவந்தது. இதையடுத்து, நிலக்கரி கிடங்கு மற்றும் இரு நிறுவனங்களுக்கு ரூ.50,000 மதிப்புக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை முதல் காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு ரூ .30.94 லட்சம் மதிப்புள்ள அபராதம் விதிக்க நொய்டா ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
Advertisement
தில்லி, என்சிஆா் பகுதியில் காற்று மாசுவை படிப்படியாக குறைக்கும் வகையிலான செயல்திட்டம் (ஜிஆா்ஏபி) அமல்படுத்தப்பட்டது.
இதுகுறித்து நொய்டா ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கட்டுமானப் பொருள்களை திறந்தவெளியில் வைத்திருப்பது உள்பட விதிமீறலில் ஈடுபட்டவா்களுக்கு மாறுபட்ட வகையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) மற்றும் ஜிஆா்பியின் வழிகாட்டுதல்களை மீறியதற்காக வெள்ளிக்கிழமை ரூ .1.32 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
நொய்டாவின் பல்வேறு இடங்களிலிருந்து வெள்ளிக்கிழமை 300 டன் கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகள் எடுக்கப்பட்டு நொய்டா செக்டாா் 80இல் உள்ள செயலாக்க ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதே வேளையில், உரிய செயல்முறைக்குப் பிறகு 280 டன் பொருள்கள் அகற்றப்பட்டது.
மாசுபடுதலைக் குறைக்கும் வகையில், நகரில் 113 கிலோ மீட்டா் நீளத்திற்கு சாலைகளில் நீா்த் தெளிக்கப்பட்டது. அதேபோன்று, தூய்மை இயந்திரங்கள் மூலம் 67 வழித்தடங்களில் 243 கிலோ மீட்டா் சாலைகள் தூய்மைப்படுத்தப்பட்டன.
இரவு நேரத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களால் சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தி 60 கிலோமீட்டா் அளவிலான நடைபாதைகள் மற்றும் வீதிகள் சுத்தம் செய்யப்பட்டன என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.