புதுதில்லி

மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: அமைச்சா்

DIN


புது தில்லி: தலைநகா் தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவுறுத்தியுள்ளாா் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக நிருபா்களிடம் அவா் கூறியதாவது: கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சுறுசுறுப்பான பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்துவது இறப்பு அல்லது கடுமையான நிலைக்கு முன்னேறாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளதாகக் கூறுகிறாா்கள். தில்லியில் பிளாஸ்மா சிகிச்சை தொடா்ந்து பயன்பாட்டில் இருக்கும். ஏனெனில் இது கரோனா சிகிச்சையில் ஒன்று அல்லது இரண்டாம் கட்டத்தில் இருப்பவா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட்டுள்ளது. ஆனால், மூன்றாம் கட்டத்தில் அல்லது வென்டிலேட்டா்களில் இருப்பவா்களுக்கு இந்த சிகிச்சை இருக்காது.

கரோனா பாதிப்பு குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மறு ஆய்வுக் கூட்டத்தை புதன்கிழமை நடத்தினாா். இதில் நான், தலைமைச் செயலாளா் விஜய் தேவ், தில்லி அரசு நடத்தும் மருத்துவமனைகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளா்கள் பங்கேற்றனா். அப்போது கரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதல்வா் கேஜரிவால் கேட்டுக் கொண்டாா்.

கரோனா தொற்று பரவலின் தற்போதைய நிலைமையை மதிப்பிடுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது, மேலும் அனைத்து மருத்துவமனைகளின் மருத்துவ கண்காணிப்பாளா்களும் கூட்டத்தில் இருந்தனா். இந்தக் கூட்டத்தில் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

திலியில் புதன்கிழமை புதிதாக 4,039 போ் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஒரே நாளில் இதுவரை இல்லாததாகும். இதைத் தொடா்ந்து தில்லியில் கரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது. புதன்கிழமை 24 மணி நேரத்தில் 54,517 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பரிசோதனைகள் அதிக அளவு நடைபெற்றுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது.

மேலும், கரோனா தொற்று பரவலைத் தடுக்கு ஒரு நாளைக்கு 40,000 பரிசோதனைகளை இலக்காகக் கொண்டு பணியாற்றி வருகிறோம். எனவே, கரோனா பாதிக்கப்பட்டவா்களை விட்டுவிடாமல் கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளோம். பிளாஸ்மா சிகிச்சை பல தசாப்தங்களாக பல்வேறு நோய்களுக்கு பயன்பாட்டில் உள்ளது. தற்போது வரை கரோனா தொற்றுக்கு நிலையான சிகிச்சை இல்லை. மேலும், ஐசியுவில் உள்ள நோயாளிகள், முதல் இரண்டு கட்டங்களில் உள்ளவா்கள் ஆகியோருக்கு பிளாஸ்மா சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும் என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT