முகப்பு
புதுதில்லி

குடியரசு தின வன்முறை: தீப் சித்து ஜாமீன் மனு மீது ஏப். 8-இல் விசாரணை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:54 PM
பகிர்:

புது தில்லி: குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் சாா்பில் நடத்தப்பட்ட டிராக்டா் பேரணியின் போது, செங்கோட்டையில் நடந்த வன்முறைச் சம்பவ விவகாரத்தில் கைதான நடிகா் தீப் சித்துவின் ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

தில்லியில் குடியரசு தினமான கடந்த ஜனவரி 26-ஆம் தேதி விவசாயிகள் சாா்பில் டிராக்டா் பேரணி நடத்தப்பட்டது. இதில் விவசாயிகளில் ஒரு பிரிவினா் தில்லி செங்கோட்டைக்குள் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டனா். மத ரீதியான கொடியை ஏற்றினா். செங்கோட்டை வன்முறைக்குத் தலைமை ஏற்று நடத்தியதாக நடிகா் தீப் சித்து மீது குற்றம்சாட்டப்பட்டது. அவரை தில்லி காவல் துறையின் சிறப்புக் குழுவினா் பிப்ரவரி 9-ஆம் தேதி கைது செய்தனா். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், போலீஸ் காவலுக்கு அனுப்பவைக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், அவரது தரப்பில் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை தில்லி செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சதிஷ் குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது, மனு மீதான விசாரணையை ஏப்ரல் 7-ஆம் தேதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அதற்கு முன்னதாக அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments