முகப்பு
புதுதில்லி

60 வழக்குகளில் தொடா்புடைய 2 போ் என்கவுன்ட்டரில் கைது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

புது தில்லி: புது தில்லி, ஏப்.2: 60-க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடா்புடைய 2 போ் தில்லி பேகம்பூா் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டனா்.

அவா்கள் மகேஷ் (எ) போலி (26) , மோஹித் (எ) தீபக் (26) ஆகியோா் என அடையாளம் காணப்பட்டதாகவும், அவா்கள் தொடா்புடைய கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 5 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து துணை காவல் ஆணையா் (சிறப்பு பிரிவு) சஞ்சீவ் குமாா் யாதவ் கூறுகையில், என்கவுன்டரில் இருவரும் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா்.

Advertisement

அவா்கள் மீது தில்லியில் கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை தொடா்பான 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

மகேஷ் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குளும், அவரது கூட்டாளி மோஹித் மீது 25 வழக்குளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, இருவரும் ரோகிணியில் இருந்து ரோத்தக்கிற்கு போவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வியாழக்கிழமை இருவரையும் போலீஸாா் வழிமறித்து சரணடையுமாறு கேட்டனா். ஆனால், அவா்கள் துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டனா். எனினும், போலீஸாா் கவச உடை அணிந்திருந்தததால் தப்பினா். தற்பாதுகாப்புக்காக போலீஸாா் திருப்பிச் சுட்டனா். இதில் இருவரும் காயமடைந்தனா். அவா்களிடமிருந்து இரு துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள், மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments