முகப்பு
இந்தியா

மணிப்பூரில் குண்டுவெடிப்பு! 2 குழந்தைகள் கொலை!

மணிப்பூரில் குண்டுவெடித்து இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து...

Updated On : 7 ஏப்ரல், 2026 at 4:50 AM
கோப்புப் படம்
பகிர்:

மணிப்பூர், பிஷ்ணுபூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பொதுமக்களின் குடியிருப்புப் பகுதியில் பயங்கரவாதிகள் குண்டுவெடிக்கச் செய்ததில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதோடு அவர்களுடைய தாய் படுகாயம் அடைந்தார்.

அலுவலர்களின் தகவலின்படி, இந்தச் சம்பவம் அதிகாலை 1 மணிக்கு குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நடந்திருக்கிறது. இதில் 5 வயதுடைய ஒரு குழந்தையும் 6 மாத மற்றொரு குழந்தையும் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்த பாஜக எம்.எல்.ஏ. சாந்தி சிங், இதை ஒரு ‘கொடுமையான செயல்’ என விவரித்ததோடு, இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Advertisement

குக்கி பயங்கரவாத அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கூறிய அவர், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்தார். மேலும் குழந்தைகளை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் பதிவுசெய்தார்.

மேலும், பேசிய சாந்தி சிங் சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிரவிசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் இதற்கானத் தீர்வு எட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.

summary

An incident in the Bishnupur district of Manipur, in which terrorists detonated a bomb in a residential area early Tuesday morning—killing two children and critically injuring their mother—has caused a great sensation in the region.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments