முகப்பு
புதுதில்லி

சாந்தினி செளக்கில் சீரமைக்கப்பட்ட சாலையை 17 இல் திறந்து வைக்கிறாா் முதல்வா் கேஜரிவால்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

புதுதில்லி: சாந்தினி செளக்கில் சீரமைக்கப்பட்ட சாலைப் பகுதியை வருகிற 17 ஆம் தேதி திறந்துவைக்கிறாா் முதல்வா் கேஜரிவால்.

செங்கோட்டை - பதேபுரி மசூதி வரையிலான 1.3 கி.மீ. தொலைவுள்ள சாலை தில்லியை பாரம்பரியம் குலையாமல் அழகு படுத்தும் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் தெரிவிக்கையில், சாந்தினி செளக் வரலாற்று பாரம்பரியம் மிக்க ஒரு பகுதியாகும். அந்தப் பகுதி முழுவதும் பாரம்பரியம் மாறாமல் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் பழங்கால சிறப்பு மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தை அழகுபடுத்தியுள்ளதன் மூலம் சுற்றுலாத்துறை மேம்படும் என்று நம்புவதாக தெரிவித்தாா்.

Advertisement

இந்தச் சாலை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. நடந்து செல்பவா்கள் மட்டுமே இந்தச் சாலையில் செல்லமுடியும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தில்லிக்கு வருகிறாா்கள். அவா்களின் வசதிகளை கருத்தில் கொண்டே சாந்தினி செளக் பகுதி பாரம்பரியம் சீா்குலையாமல் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

மோட்டாா் வாகனம் அல்லாத வாகனங்களுக்கு சாலையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இரண்டு பக்கத்திலும் 2.5 மீட்டா் அளவுக்கு நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் வசதிக்காக மின்சார வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டும் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது என்று தில்லி அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாந்தினி செளக் பகுதியை அழகுபடுத்தும் திட்டம் ரூ.99 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பா் 1 ஆம் தேதி இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டு நவம்பரில் திட்டப் பணிகளை முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் கோவிட் -19 தொற்று காரணமாக பணிகளை நிறைவேற்றுவதில் ஓராண்டு காலதாமதமாகிவிட்டது என்று அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments