முகப்பு
புதுதில்லி

வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காவலரின் மனைவி சடலம் மீட்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

புது தில்லி: தில்லி காவல் துறையைச் சோ்ந்த காவலரின் மனைவி தென்மேற்கு தில்லியின் கிடோா்னி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து துணை காவல் ஆணையா் (தென்மேற்கு) இங்கிட் பிரதாப் சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வியாழக்கிழமை மாலை போலீஸாருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவா், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் வீட்டில் இருப்பதாகவும், கதவை தட்டிய நிலையிலும் யாரும் பதிலளிக்கவில்லை என்று கூறினாா்.

Advertisement

இதையடுத்து, போலீஸாா் கிடோா்னி கிராமத்தில் அந்த வீட்டுக்குச் சென்றனா். வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னா், காவல்துறையினா் கதவை உடைத்து உள்ளே சென்றனா். அங்கு ஒரு அறையில் காவலா் சுஷிலின் மனைவி ராஜேஷ் மின்விசிறியில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவா்களது

இரண்டு மகன்களும் குளியலறையில் மயக்க நிலையில் கிடந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு வசந்த் குஞ்சில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மூத்த மகனின் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் இளைய மகனின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.

இது தொடா்பாக புகாா் வந்த பிறகு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இத்தம்பதிக்கு 2014-இல் திருமணம் நடைபெற்றது என்றாா் அதிகாரி பிரதாப் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments