முகப்பு
புதுதில்லி

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி சரிவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

புது தில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது. குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியில் இருந்து 2 டிகிரி குறைந்து 16.2 டிகிரி செல்சியஸாக பதிவானது.

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் இருந்து 2 டிகிரி குறைந்து 16.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் இருந்து 1 டிகிரி அதிகரித்து 34.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 40 சதவீதமாகவும், மாலையில் 26 சதவீதமாகவும் இருந்தது.

Advertisement

திங்கள்கிழமை கடந்த தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸ் வரை என 75 ஆண்டுளில் இல்லாத வகையில் மாா்ச் மாதத்தில் அதிக வெப்பமான நாளாக பதிவாகி இருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7 மணியளவில் 160 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை (ஏப்ரல் 3) குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும், வானம் தெளிவாக காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments