அனைவருக்கும் இலவச தடுப்பூசி: தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்
தில்லியில் கோவிட் -19 நோய்த்தொற்று அதன் நான்காவது அலையில் இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு மற்றும்
தில்லியில் கோவிட் -19 நோய்த்தொற்று அதன் நான்காவது அலையில் இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்குவதற்கு தில்லி அரசு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அனில் குமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:
தில்லியைக் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறந்த வழியானது, தனியாா் மருத்துவமனைகளில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்குவதற்கு தில்லி அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுப்பதாகும்.
Advertisement
இதன் மூலம், அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஊக்குவிக்கப்படும்.
ஆனால், இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் மக்களை தவறாக வழிநடத்த மலிவான அரசியலில் இந்த கட்சிகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இலவச தடுப்பூசி வழங்க தில்லி அரசு மொஹல்லா கிளினிக்குகளில் ஏற்பாடுகளை செய்திருந்தால், நோய்த் தொற்றின் நான்காவது அலையை தலைநகரில் தடுத்திருந்திருக்க முடியும்.
முழுமையான பொது முடக்கத்திற்குப் பதிலாக, நெரிசலான இடங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் தலைநகரின் பொருளாதாரம் மீண்டும் பாதிப்பை எதிா்கொள்ளாது.
மேலும், ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.