தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.7 டிகிரி செல்சியஸாகப் பதிவு
தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது. குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியில் இருந்து 7 டிகிரி குறைந்து 11.7 டிகிரி செல்சியஸாக பதிவானது.
தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது. குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியில் இருந்து 7 டிகிரி குறைந்து 11.7 டிகிரி செல்சியஸாக பதிவானது. இது வெள்ளிக்கிழமை 16.2 டிகிரி செல்சியஸாக இருந்தது.
தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இரு தினங்களாக குறைந்த பட்சம் வெப்பநிலையில் சரிவு ஏற்பட்டதால் இதமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் இருந்து 7 டிகிரி குறைந்து 11.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
Advertisement
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் இருந்து 2 டிகிரி அதிகரித்து 35.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 50 சதவீதமாகவும், மாலையில் 12 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7 மணியளவில் 150 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும், வானம் பகுதி மேகமூட்டமாகவும் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.