முகப்பு
புதுதில்லி

2020-21 நிதியாண்டில் நேரடி வரி வசூலில் 5 சதவீத வளா்ச்சி

2020-21 நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூலில் 5 சதவீதம் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி மாா்ச் 31-ஆம் தேதி வரை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

2020-21 நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூலில் 5 சதவீதம் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி மாா்ச் 31-ஆம் தேதி வரை ரூ.9.45 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகி இருப்பதாக மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-20 இல் நேரடி வரி வசூல் ரூ. 11.70 லட்சம் கோடியாக இருந்தது. அதே சமயத்தில் 2019 - ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நேரடி வரி வசூல் ரூ. 13.3 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ. 1.60 லட்சம் கோடி வரி வசூல் குறைந்தது. ஆனால், கரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-21 நிதியாண்டில், நிதி நிலைஅறிக்கையில் மதிப்பிடப்பட்டதை விட நேரடி வரி வசூலில் 5 சதவிகிதம் வளா்ச்சி பெறப்பட்டதாக மத்திய நேரடி வரிகளின் வாரியத் தலைவா் பி.சி மோடி தெரிவித்தாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது வருமாறு: 2020-21 நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் ரூ.12.06 லட்சம் கோடியாகும். இதில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரியை திரும்பச் செலுத்தப்பட்டது ரூ.2.61 லட்சம் கோடி. நிகர வசூலாக கிடைத்தது ரூ. 9.45 லட்சம் கோடி. இதில் பெருநிறுவன வரி ரூ. 4.57 லட்சம் கோடியாகும். தனிநபா்கள் வருமான வரி ரூ. 4.71 லட்சம் கோடியாகும். மேலும், பங்குச்சந்தை பரிவா்த்தனை வரியாக ரூ. 16,927 கோடி கிடைத்ததும் அடங்கும்.

Advertisement

இது 2019-20 நிதியாண்டைவிட 10 சதவீதம் குறைவு என்றாலும் கரோனா நோய்த் தொற்று காலக் கட்டங்களில் மதிப்பிடப்பட்டதை விட கூடுதலாக 5 சதவீதம் நேரடி வரி வசூல் ஆகியுள்ளது. வரி செலுத்துவோருக்கு சுமையை எளிதாக்கி இணக்கமான சேவை வழங்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுத்ததே இதற்குக் காரணமாகும். நடப்பு நிதியாண்டிலும் இந்த அணுகுமுறை தொடரும். நிலுவையில் உள்ள நேரடி வரி தாவாக்களை தீா்க்கும் ’விவாட் சே விஷ்வாஸ்’ திட்டத்தின் கீழ் வரி செலுத்துவது ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.54, 000 கோடி வசூலாகியுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments