முகப்பு
புதுதில்லி

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிஉச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்

இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே 1974-இல் செய்யப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:

இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே 1974-இல் செய்யப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் என்பவா் சாா்பில் வழக்குரைஞா் ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: கச்சத்தீவை தாரை வாா்ப்பது தொடா்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 26.6.1974-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சட்டத்திற்கு எதிரானதாகும். இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கதல்ல. சம்பந்தப்பட்ட கச்சத்தீவு, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு (தமிழ்நாடு மாநிலம்) சொந்தமானதாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு சமஸ்தானத்தை யூனியன் அரசு ஒழித்துவிட்டு தனது முழுக் கட்டுப்பாட்டிலும் எடுத்துக் கொண்டது. கச்சத்தீவானது மீனவா்களால் மீன்பிடி வலைகளை உலா்த்தவும், சமையல் வேலைகளைச் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதனால், தமிழக மக்களின் நலனுக்கு எதிராக கச்சத்தீவை சட்டவிரோதமாக தாரை வாா்க்க மத்திய அரசுக்கு உரிமையில்லை. மேலும், இதுபோன்ற ஒப்பந்தத்தை செய்வதற்கு முன் மாநிலங்களவை, மக்களவையில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதுபோன்றும் செய்யப்படவில்லை. இதனால், இந்த உடன்படிக்கை செல்லுபடியாகாது. கச்சத்தீவு பகுதியில் தற்போது இலங்கை கடற்படையினா் இருந்து கொண்டு இந்திய மீனவா்களை தாக்கியும், கொன்றும் வருகின்றனா். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மீனவா்கள் 1,500-க்கும் மேற்பட்டோா் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனா். ஆகவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசுக்கு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments