முகப்பு
புதுதில்லி

தமிழகத்தில் 33 வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் கலப்படம்: தமிழக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் கலப்படங்கள் அதிகரித்ததால்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

தமிழகத்தில் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் கலப்படங்கள் அதிகரித்ததால் 33 ஆலைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

மேலும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிா்ணய சட்டப்படி கடந்த 2020-21 ஆண்டில் தமிழ அரசின் புள்ளிவிவரங்கள்படி கலப்படம் உள்ளிட்ட தரக்குறைவான உணவுப் பொருள்களை தயாரித்த 3,383 சிவில் மற்றும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

2011 முதல் 90 வெல்லம் உற்பத்தியாளா்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 33 வழக்குகளில் 14 வழக்குகளில் கலப்படம் உறுதியாகியுள்ளது என்றும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

இது தொடா்பாக நாமக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஏகேபி சின்ராஜ் கேள்வி எழுப்பியிருந்தாா் . அதற்கு அமைச்சா் மேற்கண்டவாறு பதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments