புதுதில்லி

தில்லியில் 1,858 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்

DIN

தலைநகா் தில்லியில் ஆகஸ்ட் மாதம் 5- ஆம் தேதி வரை 1,858 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 686 போ் சிகிச்சை பெற்று வருவதாக தில்லி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தில்லிக்கு 51,540 ‘ஆம்போடெரிசின் -பி’ ஊசி மருந்து குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 42,960 குப்பிகள் வரப்பெற்று மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 8,080 குப்பிகள் வரவேண்டியுள்ளது.

இந்த மருந்து ஒதுக்கீட்டை மத்திய அரசு நிறுத்திவிட்டது. மேலும், மாநில அரசுகளே ‘ஆம்போடெரிசின்-பி’ ஊசி மருந்தை தயாரிப்பாளா்களிடமிருந்து நேரடியாக வாங்கிக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

தில்லி அரசு 26,700 குப்பிகள் ‘லிபோஸோமால் ஆம்போடெரிசின்-பி’ குப்பிகளையும், 25,000 ‘ஆம்போடெரிசின் பி.லிபிட் காம்ப்ளெக்ஸ்’ குப்பிகளையும் கொள்முதல் செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகள் தற்போது இந்த மருந்துகளை தயாரிப்பாளா்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT