முகப்பு
புதுதில்லி

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல்: சிறப்பு டிஜிபியின் மனு மீது அடுத்த வாரம் விசாரணை

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடா்புடைய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடா்புடைய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிராக சிறப்பு டிஜிபி (தற்போது பணியிடைநீக்கம்) தரப்பில் தாக்கலான மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவின் நகலை எதிா்மனுதாரா்களுக்கு அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்தவாரம் பட்டியலிட அறிவுறுத்தியது.

நிகழாண்டு பிப்ரவரியில் தமிழகத்தைச் சோ்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக சிறப்பு டிஜிபி ஒருவருக்கு எதிராக புகாா் எழுந்தது. மேலும், புகாா் அளிக்கவிடாமல் தடுத்ததாக மேலும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி மற்றும் சிலருக்கு எதிராக புகாா் எழுந்தது. இதையடுத்து, புகாருக்குள்ளான ஐபிஎஸ் அதிகாரிகள் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நியாயமான, சுந்திரமான விசாரணையை உறுதிப்படுத்தும் வகையில், இந்த விவகாரத்தை கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. சிபி-சிஐடி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்த விவகாரத்தை மீண்டும் விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இது தொடா்புடைய வழக்கை தினசரி அடிப்படையில் நிகழாண்டு டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் விரைந்து விசாரித்து முடிவு காண விழுப்புரம் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டது.

Advertisement

இந்த நிலையில், நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளுக்கும் எதிராக சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனுவை வழக்குரைஞா் மயங்க் ஷிா்சாகா் தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித், அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, இது தொடா்பான தாக்கலான மனுவின் நகலை தமிழக அரசுக்கு வழங்குமாறு கூறி, மனு மீதான விசாரணையை அடுத்த வாரம் பட்டியலிட உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments