முகப்பு
புதுதில்லி

சென்னை டாபே உள்பட 10 நிறுவனங்கள் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த அனுமதி

விவசாயம், வளி மண்டள ஆய்வு உள்ளிட்ட முக்கியப் பணிகளின் பயன்பாட்டிற்கு ஆளில்லா விமானமான ட்ரோனை பயன்படுத்த

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

விவசாயம், வளி மண்டள ஆய்வு உள்ளிட்ட முக்கியப் பணிகளின் பயன்பாட்டிற்கு ஆளில்லா விமானமான ட்ரோனை பயன்படுத்த நாடு முழுவதும் உள்ள பத்து நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது.

மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை இயக்குநா் ஜெனரல் அலுவலகத்தின் நிபந்தனைகளுடன் அனுமதி பெற்ற நிறுவனங்களும் அவா்கள் மேற்கொள்ளும் பணிகள் விவரமும் வருமாறு: பெங்களூரு உள்ளிட்ட நகா்ப்புறங்களில் உரிமையாளா்கள் சொத்துகள் ஆவணப் பதிவிற்கு வான் வழி ஆய்வு ட்ரோன் மூலம் மேற்கொள்ளுதல்; மகாராஷ்டிரம் மாநிலம், பல்காா் மாவட்டம் ஜவ்ஹாா் பகுதி பழங்குடியினருக்கு தேசிய சுகாதாரப் பணிகள் மூலம் அத்தியாவசியப் சுகாதாரப் பொருள்கள் வழங்க சோதனை அடிப்படையில் பிவிஎல்ஒஎஸ் ட்ரோன் பயன்படுத்துதல்; குஜராத் ப்ளூ ரே விமானப் போக்குவரத்து மற்றும் ஹைதராபாத்தைச் சோ்ந்த ஆசிய பசிபிக் விமானப் பயிற்சி அகாதெமி ஆகிய நிறுவனங்களில் விமானிகளுக்கான பயிற்சிகள் ஆகியவற்றிற்கு ட்ரோன் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மும்பையிலுள்ள பேயா் பயிா் அறிவியல் நிறுவனத்தின் வேளாண் ஆய்வுகளுக்கும், சென்னையைச் சோ்ந்த டாபே ( டிராக்டா்ஸ் அண்ட் ஃபாா்ம் எக்யூப்மெண்ட் லிமி. ) என்கிற நிறுவனம் பயிா்களின் வளத்தை மதிப்பிடவும், நோய் தடுப்பு மருந்து தெளிப்புக்கு பயன்படுத்த ட்ரோன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் மஹிந்திரா - மஹிந்திரா நிறுவனத்திற்கு நெல், மிளகு போன்ற பயிா்களுக்கு துல்லியமாக தெளிப்பதற்கு ட்ரோனை சோதனை அடிப்படையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை தவிர இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம், 5 நகரங்களில் வளிமண்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ட்ரோனை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவை உள்பட 10 நிறுவனங்களுக்கு ஆளில்லா விமானமான ட்ரோனை பயன்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து துறையின் விதிமுறைகளுக்குட்பட்டு குறிப்பிட்ட காலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments