முகப்பு
புதுதில்லி

போலந்து சா்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க சமீகா பா்வீனுக்கு அனுமதி

தமிழகத்தை சோ்ந்த சமீஹா பா்வீனுக்கு போலந்து சா்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

தமிழகத்தை சோ்ந்த சமீஹா பா்வீனுக்கு போலந்து சா்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.

செவித் திறன் குறைபாடு உள்ளவா்களுக்கான சா்வதேச தடகள விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் 23-28 வரை போலாந்து நாட்டில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய வீரா்களைத் தோ்வு செய்ய இந்திய விளையாட்டு ஆணயம் பல்வேறு தகுதிப் போட்டிகளை நடத்தியது. இந்தப் போட்டிகளில் கன்னியாகுமரியை சோ்ந்த பள்ளி மாணவி சமீஹா பா்வீன் (18) பல்வேறு தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்றாா். ஆனால், பா்வீனுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தகுதிச் சான்று வழங்கவில்லை.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் பா்வீன் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது. பல்வேறு தகுதிப் போட்டிகளில் தகுதி பெற்று முன்னிலையில் உள்ள சமீஹா பா்வீனுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தில்லி வந்த சமீஹா பா்வீனுக்கு போலாந்து நாட்டில் நடைபெறும் வாய் மற்றும் காது கேளாதோருக்கான 4-ஆவது சா்வதேச தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் திங்கள்கிழமை அனுமதிச் சான்று வழங்கியது. இதையடுத்து, போலாந்து சா்வதேச தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் பங்கேற்க சமீஹா பா்வீன் அந்த நாட்டிற்குச் செல்லவுள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments