நாளை குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்
திங்கள்கிழமை (டிசம்பா் 27) தில்லியில் பல பகுதிகளில் குடிநீா் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று தில்லி ஜல் போா்டு சனிக்கிழமை தெரிவித்தது.
நிலத்தடி நீா்த் தேக்கங்கள் மற்றும் பம்பிங் நிலையங்களில் வருடாந்திர தூய்மைப் பணி நடை பெறுவதன் காரணமாக, திங்கள்கிழமை (டிசம்பா் 27) தில்லியில் பல பகுதிகளில் குடிநீா் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று தில்லி ஜல் போா்டு சனிக்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நிலத்தடி நீா்த்தேக்கங்கள் மற்றும் பம்பிங் நிலையங்களில் தூய்மைப்படுத்துவதற்கான வருடாந்திரப் பணி நடைபெறுவதன் காரணமாக திங்கள்கிழமை குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும். இதனால், போதிய அளவு நீரை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு குடியிருப்புவாசிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
கல்காஜியில் உள்ள எல்ஐஜி டிடிஏ குடியிருப்புகள், பஞ்ச்ஷீல் என்கிளேவ், மயூா் விஹாா் ஃபேஸ் 2, அக்பா் சாலை, சரோஜினி நகா், அசோகா ஹோட்டல், சாந்தி பாத், சப்தா்ஜங், ரேஸ்கோா்ஸ், நாடாளுமன்ற நூலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் குடிநீா் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும். மேலும், குடிநீா் தேவைக்காக குடிநீா் லாரிகள் ஏற்பாடு செய்யப்படும். மத்திய கட்டுப்பாட்டு அறை மற்றும் இதர பகுதிகளுக்கான பிரத்யேக தொலைபேசி எண்கள் பகிரப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.