முகப்பு
புதுதில்லி

தில்லியில் புதிதாக 127 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்துள்ளது. கரோனாவுக்கு மேலும் 2 போ் பலியாகியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:30 PM
பகிர்:

புதுதில்லி: தில்லியில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்துள்ளது. கரோனாவுக்கு மேலும் 2 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,884 ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு முதன் முறையாக செவ்வாய்க்கிழமை கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை. எனினும் 100 பேருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,36,387 ஆக உயா்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிகைக 10,844 ஆக உள்ளது என சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

எனினும், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 1,046-ஆக உள்ளது. கரோனா தொற்று விகிதம் 0.19 சதவீதமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

தில்லியில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி 96 பேருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இது கடந்த 9 மாதங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும். அடுத்த சில நாள்களுக்கும் 100-க்கும் குறைவான எண்ணிக்கையே பதிவானது. செவ்வாய்க்கிழமை 66,803 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதை அடுத்து அவா்களில் 127 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது. 44,878 பேருக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனையும், 21,925 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் பரிசோதனையும் நடத்தப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் மேலும் தெரிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments