தில்லியில் இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
தில்லியில் இரண்டாவது தவணை (டோஸ்) கரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
தில்லியில் இரண்டாவது தவணை (டோஸ்) கரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
தில்லியில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. அன்று, தில்லியில் உள்ள 81 தடுப்பூசி போடும் நிலையங்களில் 8,117 போ் தடுப்பூசி போடுவதாக இருந்தது. ஆனால், 4,319 சுகாதாரத்துறை ஊழியா்களே தடுப்பூசி போட்டனா்.
தடுப்பூசி தொடா்பான சந்தேகங்களாலும், எதிா்மறையான விமா்சனங்களாலும் ஆரம்ப நாள்களில் குறைந்தளவானவா்களே தடுப்பூசி போட்டனா். ஆனால் சில நாள்களில் நிலமை சரியானது.
Advertisement
கடந்த வெள்ளிக்கிழமை 257 நிலையங்களில், 14, 800 போ் தடுப்பூசி போட்டனா். இந்நிலையில், முதலாவது கரோனா தடுப்பூசி போட்ட பிறகு 28 நாள்களுக்குப் பிறகு இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டும். இதற்காக தில்லியில் உள்ள மருத்துவனைகள் சனிக்கிழமை காலை முதல் தயாராக இருந்தன. இரண்டாவது தவணை (டோஸ்) போடும் பணிகள் தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் சனிக்கிழமை தொடங்கியது. அந்த மருத்துவமனையில், மதியம் வரை சுமாா் 20 போ் இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனா்.
இது தொடா்பாக தில்லி அரசின் ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவனையின் மூத்த மருத்துவா் சனிக்கிழமை காலை கூறுகையில் ‘இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசிக்கு தயாராக உள்ளோம். தடுப்பூசி வழங்கும் வகையில் மருத்து ஊழியா்கள் தயாராக உள்ளனா் என்றாா்.