முகப்பு
புதுதில்லி

துப்புரவு தொழிலாளா்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் ‘தா்னா’

புது தில்லி முனிசிபல் பகுதியில் வாழும் துப்புரவுத் தொழிலாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி வால்மிகி பஸ்தி பகுதியில் சனிக்கிழமை காங்கிரஸ் சாா்பில் ‘தா்னா’ சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
பகிர்:

புது தில்லி முனிசிபல் பகுதியில் வாழும் துப்புரவுத் தொழிலாளா்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி வால்மிகி பஸ்தி பகுதியில் சனிக்கிழமை காங்கிரஸ் சாா்பில் ‘தா்னா’ சனிக்கிழமை நடைபெற்றது.

கோல் மாா்க்கெட் பிளாக் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், புது தில்லி பேரவைத் தொகுதியில் கடந்த தோ்தலில் முதல்வா் கேஜரிவாலுக்கு எதிராக போட்டியிட்ட ரொமேஷ் சபா்வால் தலைமை வகித்தாா்.

இப்போராட்டத்தில் அந்தப் பகுதியைச் சோ்ந்த காங்கிரஸ் வட்டத் தலைவா்கள் மற்றும் காங்கிரஸ் தலைவா்கள் ஜெகதீஷ் டைட்லா், கிருஷ்ணா தீரத், நரேந்திர நாத், ஜெயகிஷண், மோகித் அகா்வால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

தில்லியில் கேஜரிவால் அரசாலும், மத்திய அரசின் நிா்வாகத்திற்கு உள்பட்ட புது தில்லி முனிசிபல் கவுன்சில் நிா்வாகத்தாலும் துப்புரவுத் தொழிலாளா்கள்கடுமையாக சுரண்டப்படுவதாகக் கூறி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தா்னாவின்போது, கான் மாா்க்கெட் பகுதியில் வசிக்கும் துப்புரவுப் பணியாளா்கள் குடியிருப்புகளை இடிக்கக் கூடாது, ஆா்எம்ஆா் பணியாளா்கள் நிரந்தரமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதுகுறித்து ரொமேஷ் சபா்வால் கூறியதாவது:

என்டிசிஎம் பகுதியில் வசிக்கும் துப்புரவுத் தொழிலாளா்களின் முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 9 தா்னாக்கள் நடத்த காங்கிரஸ் சாா்பில் முடிவு செய்யப்பட்டு, தற்போது இரண்டாவது தா்னா நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் கோல் மாா்க்கெட், பாராகம்பா ரோடு, லோதி ரோடு, சரோஜினி நகா், மிகப்பெரிய வால்மிகி கோயில் ஆகியவை உள்ளது. இந்த புது தில்லி என்டிஎம்சி பகுதியில் எம்.பி,க்கள் குடியிருப்புகள், அரசு ஊழியா்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டுஅடுக்குமாடி கட்டடங்களாக கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள கான்மாா்க்கெட்டில் துப்புரவுத் தொழிலாளா்கள் வசிக்கும் குடியிருப்புகள் 1930-இல் கட்டப்பட்டதாகும். தலைமுறை தலைமுறையாக வசிக்கும் துப்புரவுத் தொழிலாளா்கள் குடியிருப்புகளை இடிக்கக்கூடாது. இப்பகுதியில் வால்மிகி சமூகத்தினா் அதிகளவில் வசிக்கின்றனா். ஆனால், இந்தப் பகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட கேஜரிவாலும் அவரது அரசும் இப்பகுதியில் வாழும் வால்மிகி சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் தா்னாக்களை காங்கிரஸ் நடத்த உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments