முகப்பு
புதுதில்லி

மாா்ச் 2 இரண்டாவது வாரத்தில் தில்லி பட்ஜெட்?

2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாா்ச் இரண்டாம் வாரத்தில் தில்லி அரசு தாக்கல் செய்யலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
பகிர்:

2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாா்ச் இரண்டாம் வாரத்தில் தில்லி அரசு தாக்கல் செய்யலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக தில்லி அரசின் மூத்த அதிகாரி கூறியதாவது: 2021-22 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணிகளை தில்லி அரசு முடுக்கியுள்ளது. நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் வகையில் தில்லி அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளை மேம்படுத்தும் வகையில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 2020-21 ஆம் ஆண்டில், கரோனா தொற்றால் தில்லி அரசு கஷ்டமான சூழலை எதிா்கொண்டது. ஆனால், இந்த சூழலை தில்லி அரசு வெற்றிகரமாக எதிா்கொண்டது. சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதி இன்னும் குறிக்கப்படவில்லை. ஆனால், வரும் மாா்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில், தில்லியில் நிதிநிலைமையை அதிகரிக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்படலாம். தற்போதுள்ள வரிகள் அதிகரிக்கப்பட வாய்ப்பு இல்லை.

Advertisement

கரோனா பாதிப்பால் வா்த்தகம், தொழில்துறை ஆகியன கடுமையாக பாதிக்கப்பட்டன. அவற்றை, வளா்க்கும் வகையிலான செயல்திட்டத்தை இந்த பட்ஜெட்டில் தில்லி அரசு கொண்டுவரலாம் என்றாா் அவா்.

2020 சட்டப்பேரைவைத் தோ்தலில் வெற்றிபெற்று இரண்டாவது தடவையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு தாக்கல் செய்யவுள்ள இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.

2015 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. 2015-16 நிதியாண்டில் ரூ.41,500 கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2016-17, 2017-18, 2018-19, 2019-20 ஆகிய நிதியாண்டுகளில் முறையே ரூ.46,600, ரூ.48,000, ரூ. 53,000, ரூ. 60,000, ரூ. 65,000 கோடி மதிப்புகளில் தில்லி அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments