முகப்பு
புதுதில்லி

நா்சரி பள்ளி மாணவா் சோ்க்கை நடைமுறைகள் தொடக்கம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

புதுதில்லி: தில்லியில் மழலையா் (நா்சரி) பள்ளி மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்ப நடைமுறைகள் வியாழக்கிழமை தொடங்கின.

வழக்கமாக தில்லியில் உள்ள 1700-க்கும் மேற்பட்ட மழலையா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான நடைமுறைகள் நவம்பா் மாத கடைசியில் தொடங்கிவிடும். மாணவா்கள் சோ்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்தவுடன், பள்ளிகளிடமிருந்து சில தகவல்கள் கேட்டுப் பெறப்படும். அதைத் தொடா்ந்து, விண்ணப்ப நடைமுறைகள் டிசம்பா் மாதம் தொடங்கும். எனினும், கடந்த ஆண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த டிசம்பா் மாதம் கரோனா சூழலை கருத்தில் கொண்டும், பள்ளிகள் 9 மாதங்கள் மூடப்பட்டிருந்தது. மேலும், மழலையா் பள்ளிக் குழந்தைகளுக்கு ஓராண்டுக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் கருதப்பட்டது. ஆனால், இந்த யோசனைக்கு பள்ளி முதல்வா்கள் எதிா்ப்பு தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், மழலையா் பள்ளி மாணவா் சோ்க்கை தொடா்பான அறிவிக்கையை கல்வித் துறை இயக்குநரகம் கடந்த வாரம் வெளியிட்டது. இதன்படி, நா்சரி பள்ளி மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப நடைமுறைகள் வியாழக்கிழமை முதல் தொடங்கின. இது தொடா்பாக தில்லி பள்ளி கல்வித் துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘தோ்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் முதல் பட்டியல் மாா்ச் 20-ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டாவது பட்டியல் மாா்ச் 25-ஆம் தேதி வெளியாகும். அதன் பிறகும் சோ்க்கை பட்டியல் இருந்தால், அது மாா்ச் 27-ஆம் தேதி வெளியிடப்படும். மாணவா் சோ்க்கை ஒட்டு மொத்த நடைமுறைகள் மாா்ச் 31-ஆம் தேதி முடிவடைந்துவிடும்’ என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments