முகப்பு
கிரிக்கெட்

தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி இல்லை; பிரெவிஸ் பங்கேற்க வாய்ப்பு!

சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி குறித்து...

Updated On : 8 ஏப்ரல் 2026, 5:16 pm IST
பிரெவிஸ், தோனி. - படம்: சிஎஸ்கே.
பகிர்:

சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணி முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அணியில் எம்.எஸ். தோனி, டெவால்டு பிரெவிஸ், ஸ்பென்சர் ஜான்சன் காயம் காரணமாக விளையாடாமல் இருக்கிறார்கள்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (5) கோப்பை வென்ற அணிகளில் ஒன்றாக சிஎஸ்கே இருக்கிறது. 2023 சீசனில் கோப்பை வென்ற பிறகு, கடந்த 2 சீசன்களில் மோசமாக விளையாடி வருகிறது.

Advertisement

Advertisement

சிஎஸ்கே அணி நான்காவது போட்டியில், தில்லி கேபிடல்ஸுடன் சேப்பாக்கத்தில் ஏப்.11ஆம் தேதி விளையாட இருக்கிறது. அடுத்து, அதே திடலில் ஏப்.14ஆம் தேதி கேகேஆர் அணியுடன் விளையாட இருக்கிறது.

44 வயதாகும் தோனிக்கு காலின் பின் தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. கூடுதலாக இன்னும் ஒரு வாரம் தேவைப்படுமென கூறப்படுகிறது. ஏப்.7ஆம் தேதி எடுத்த ஸ்கேனில் முன்னேற்றம் இல்லை எனக் கூறப்படுகிறது. காயம் காரணமாக தோனி வெளியூர் ஆட்டங்களுக்கு அணியுடன் பயணிக்காதது கவனிக்கத்தக்கது.

சிஎஸ்கேவின் சிஇஒ காசி விஸ்வநாதன், “தோனி சிகிச்சைப் பெற்று வருகிறார். அதற்கு சில காலம் ஆகும். எவ்வளவு நாள்கள் எனக் கூற முடியாது. டெவால்டு பிரெவிஸ் அடுத்த போட்டிக்கு வர வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் அவர் குணமடையும் வேகத்தைப் பொறுத்தது. அடுத்த போட்டிக்கு இன்னும் சில நாள்கள் இருக்கின்றன என்றார்.

summary

Dhoni will not play in the match against Delhi! Brevis likely to participate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.