முகப்பு
புதுதில்லி

யமுனை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு வழங்கிய ரூ.673 கோடி என்னவாயிற்று? கேஜரிவாலுக்கு ஆதேஷ் குப்தா கேள்வி

யமுனை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு தில்லி அரசுக்கு வழங்கிய ரூ.673.86 கோடிக்கு என்னவாயிற்று என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா கேள்வி எழுப்பியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:34 PM
பகிர்:

யமுனை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு தில்லி அரசுக்கு வழங்கிய ரூ.673.86 கோடிக்கு என்னவாயிற்று என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: யமுனை நதியை சுத்தப்படுத்த 2014 இல் இருந்து 2020 ஆம் ஆண்டுவரை, ரூ.673.86 கோடி நிதியை தில்லி அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.310 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், யமுனை நதியை சுத்தப்படுத்த இதுவரை தில்லி அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அந்த நிதிக்கு என்னவாயிற்று என்பது புதிராகவே உள்ளது. யமுனை நதியை சுத்தப்படுத்துவதை தனது பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாக அளித்தே தில்லியில் ஆம் ஆத்மிக் கட்சி 2015 இல் ஆட்சியைப் பிடித்தது. கடந்த 2020 இல் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலிலும் யமுனை நதியை தூய்மைப்படுத்துவோம் என்ற வாக்குறுதியை தில்லி மக்களுக்கு கேஜரிவால் வழங்கியிருந்தாா்.

ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக யமுனை நதியை தூய்மைப்படுத்த கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. யமுனையை தூய்மைப்படுத்தும் வகையில், தில்லி அரசுக்கு மத்திய அரசு இதுவரை வழங்கிய நிதிக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.

Advertisement

இது தொடா்பாக தில்லி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தில்லி அரசின் மெத்தனப்போக்கால் தில்லியில் ஓடும் யமுனையில் அமோனியாவின் செறிவு அதிகரித்துள்ளது. இதனால், யமுனை நீரை நம்பியுள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறாா்கள் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments