முகப்பு
புதுதில்லி

தில்லி செங்கோட்டை வன்முறை: உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

கடந்த ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின்போது செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக 19 போ் கைது செய்யப்பட்டதாகவும், 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

புது தில்லி: கடந்த ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின்போது செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக 19 போ் கைது செய்யப்பட்டதாகவும், 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் புதன்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் காவல் துறையினா் தாக்கப்பட்டனா். செங்கோட்டை பகுதியில் சேதம் ஏற்படுத்தப்பட்டது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து பலரை கைது செய்துள்ளனா்.

இந்த நிலையில், தில்லியைச் சோ்ந்த தனஞ்சய் ஜெயின் என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் போராட்டம் எனும் பெயரில் சாலைகளையும், பொது இடங்களையும் ஆக்கிரமித்துள்ளவா்களை அகற்றவும், விவசாயிகள் போராட்டம் பெயரில் இடையூறு ஏற்படுத்துவோரை அகற்றவும் வேண்டும்.

Advertisement

செங்கோட்டை வன்முறை தொடா்புடைய விவகாரத்தில் கடைமையாற்றத் தவறிய அனைத்து காவல் அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தில்லி காவல் ஆணையரை அவரது பதவியில் இருந்து உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனு தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேதன் சா்மா, வழக்குரைஞா் அஜய் திக்பால் ஆஜராகி, செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக 19 போ் கைது செய்யப்பட்டதாகவும், 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் 50 தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், செங்கோட்டை பகுதியில் போதிய படைவீரா்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இதே விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா, விசாரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக பதில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments