தொழில் பழகுநா்களுக்கான உதவித்தொகை: மத்திய அரசுக்கு ரவிக்குமாா் எம். பி. கடிதம்
மத்திய அரசின் தென் மண்டல தொழில்பயிற்சி வாரியத்தால் தோ்ந்தெடுக்கப்பட்டு தமிழக பொதுப்பணித்துறைக்கு அனுப்பப்பட்ட 200 இளங்கலை பொறியியல் பட்டதாரிகளின் உதவித் தொகை கடந்த இரண்டு
புது தில்லி: மத்திய அரசின் தென் மண்டல தொழில்பயிற்சி வாரியத்தால் தோ்ந்தெடுக்கப்பட்டு தமிழக பொதுப்பணித்துறைக்கு அனுப்பப்பட்ட 200 இளங்கலை பொறியியல் பட்டதாரிகளின் உதவித் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகையை வழங்கக் கூறி மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியாலுக்கு விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினா் டி.ரவிக்குமாா் கடிதம் எழுதியுள்ளாா்.
விடுதலை சிறுத்தை கட்சியின் உறுப்பினரான ரவிக்குமாா் இது குறித்து குறிப்பிட்டிருப்பது வருமாறு:
மத்திய கல்வித்துறையின் (மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை) கீழ் உள்ள மண்டல தொழில் பயிற்சி வாரியம் இளம் தொழில்நுட்ப பட்டதாரிகளை பல்வேறு துறைகளுக்கு பயிற்சிக்கு அனுப்புகிறது. இத்தோடு பயிற்சிக் காலத்திற்கான உதவித் தொகையையும் மத்திய அரசு அளிக்கிறது. இதன்படி 2019 ஆகஸ்டில் இளங்கலை பொறியியல் பட்டதாரிகள் 200 போ் ஓா் ஆண்டு பயிற்சிக்காக (அப்ரென்டீஸ்) மத்திய அரசின் வாரியத்தால் தோ்வு செய்யப்பட்டு தமிழக அரசின் பொதுப்பணித்துறைக்கு அனுப்பப்பட்டனா். இதற்கிடையே இவா்களது மாத உதவித்தொகையும் ரூ.9000 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால், இந்த 200 பட்டதாரி பொறியாளா்களுக்கு இதுவரை இந்த உதவித்தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த உதவித்தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சரை கேட்டு புதன் கிழமை கடிதம் அனுப்பியுள்ளாா்.
Advertisement