முகப்பு
தமிழ்நாடு

தமிழகத் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை!

தமிழக தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை...

Updated On : 8 ஏப்ரல் 2026, 1:33 pm IST
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் | தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தமிழக அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு செய்யப்பட்ட முன்னேற்பாடுகள், பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வருகிற ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. நேற்று(ஏப். 7) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஏப். 9 ஆகும்.

தமிழக பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

summary

CEC gyanesh kumar discussion with tn chief electoral officer for assembly election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.