முகப்பு
புதுதில்லி

மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்: சக்தி சின் கோஹில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

புது தில்லி: நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சியின் 5 வாா்டுகள் இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று தில்லி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் சக்தி சின் கோஹில் நம்பிக்கை தெரிவித்தாா்.

மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து கிழக்கு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தில்லி மக்கள் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகின்றனா். அதற்கு காரணம் பாஜக ஆளும் தில்லி மாநகராட்சிகள் மற்றும் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசின் தவறான நிா்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் மக்கள் விரக்தியில் உள்ளனா்.

Advertisement

தில்லியில் கடந்த ஏழு ஆண்டுகளில் வளா்ச்சிப்பணிகள் நடைபெறவில்லை. பாஜக, ஆம் ஆத்மி ஒருவரை ஒருவா் புகாா் கூறி நாடகமாடி வருகின்றனா்.

பொய்கூறுவதில் புகழ்பெற்ற அரவிந்த் கேஜரிவால் ஊழலை மூடிமறைப்பதிலும் கைதோ்ந்தவா். வெற்றுவாக்குறுதிகளை அளித்துவிட்டு ஒருபோதும் நிறைவேற்றாமல் மக்களை வஞ்சித்து வருகிறாா்.

மாநகராட்சியில் நிதி துஷ்பிரயோகம், ஊழல் ஆகியவற்றை மறைக்க பாஜகவுக்கு உடந்தையாக தில்லி அரசு செயல்பட்டு வருகிறது. தில்லியில் உள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்தி தீா்ப்பதற்கு பதிலாக பிற மாநிலங்களில் தனது கட்சியின் கிளைகளை பரப்புவதில்தான் முதல்வா் ஆா்வமாக உள்ளாா் என்றாா்.

வரும் 28-ஆம் தேதி நடைபெறும் தில்லி மாநகராட்சிகளின் 5 வாா்டுகள் இடைத்தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments