முகப்பு
புதுதில்லி

தில்லியில் 243 பேருக்கு கரோனா

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 243 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,39,092-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

தில்லியில் சனிக்கிழமை புதிதாக 243 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,39,092-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தில்லியில் சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 67,484 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 45,873 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 21,611 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் 0.36 சதவீதமாக உள்ளது.

Advertisement

கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை மூவா் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம், மொத்த பலி எண்ணிக்கை 10,909-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 164 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,26,876-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,307 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 627 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,315 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments