விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!
விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
கடலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசாரத்துக்கு காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, திட்டக்குடி (தனி), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) என 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
Advertisement
Advertisement
கடலூர் மாவட்டத்தில் தவெக, சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் மஞ்சக்குப்பம் திடல், வடலூர் நான்குமுனை சந்திப்பு, சேத்தியாத்தோப்பு நான்குமுனை சந்திப்பு, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் நாளை 9ம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்கு அனுமதி வழங்கக் கோரி தவெகவினர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
இது தொடர்பாக மனுவை பரிசீலனை செய்த காவல்துறை அதிகாரிகள், 16 நிபந்தனைகளுடன் விஜய் பிரசாரம் மேற்கொள்ளுவதற்காக அனுமதி வழங்கியுள்ளனர்.
ஹெலிகாப்டர் மூலமாக விஜய், கடலூருக்கு வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அவர் சாலை வழியாக வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க... ஏப். 9 முதல் ஏப். 29 வரை வாக்குக் கணிப்புகளை வெளியிடத் தடை!
The police have granted permission for the campaign rally in Cuddalore, which will be attended by Tamilaga Vettri Kazhagam leader Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.