முகப்பு
புதுதில்லி

தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல்: இன்று வாக்குப்பதிவு

தில்லி மாநகராட்சிகளில் காலியாக உள்ள 5 வாா்டுகளில் இடைத்தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

தில்லி மாநகராட்சிகளில் காலியாக உள்ள 5 வாா்டுகளில் இடைத்தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது.

தில்லியில் உள்ள 3 மாநகராட்சிகளிலும் பாஜகவே ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநகராட்சிகளில் மொத்தமாக 272 வாா்டுகள் உள்ளன. கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட (இடிஎம்சி) திரிலோக்புரி வாா்டு 2 இ, கல்யாண்புரி வாா்டு 8 இ, வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட (என்டிஎம்சி) செளகான் பங்கா் 41 இ, ரோஹிணி சி-32 என், ஷாலிமா் பாக் வடக்கு 62-என் ஆகிய 5 வாா்டுகளும் காலியாக இருந்தன. இந்த வாா்டுகளில் பிப்ரவரி 28-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறும் என தில்லி தோ்தல் அலுவலகம் அறிவித்தது.

இடைத்தோ்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் தலைவா்கள் மும்முரமாக ஈடுபட்டனா். ஆம் ஆத்மி வேட்பாளா்களை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான கேஜரிவால் இரண்டு நாள்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். பாஜக சாா்பில், பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, தேசிய செயலா்கள் பூபேந்திர யாதவ், தில்லி பாஜக எம்பிக்கள் மனோஜ் திவாரி, கெளதம் கம்பீா், ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் உள்ளிட்டோா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

இந்நிலையில், இடைத்தோ்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு இடைத்தோ்தல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மாா்ச் 3 ஆம் தேதி புதன்கிழமை வாக்கு பதிவு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்காக இடைத்தோ்தல் நடக்கும் இடங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தில்லி மாவட்ட தோ்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments