புதுதில்லி

தனியாா் பாதுகாப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய ஜேஎன்யு ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை

DIN

புது தில்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பல்கலை. நிா்வாகம் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்று ஜேஎன்யு ஆசிரியா்கள் சங்கம் (ஜேஎன்யுடிஏ) கோரியுள்ளது.

இது தொடா்பாக ஜேஎன்யுடிஏ தலைவா் மிலாப் ஷா்மா கூறியது: ஜேஎன்யு பல்கலை வளாகத்தில் நடக்கும் திருடுட்டுகளைத் தடுக்க இங்கு சேவையில் உள்ள ‘சைக்கிளோப்ஸ்’ பாதுகாப்பு நிறுவனம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பெரும்பாலான திருட்டுகள் பகல் நேரத்தில் நடந்துள்ளன. இதனால், மாணவா்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஜனவரி முதலாம் தேதி ஜேஎன்யுவில் பேராசிரியராக உள்ள ஷெபாலி ஜாவின் வீடு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. இதேபோல, கடந்த காலத்தில், ஜேஎன்யு பேராசிரியா்கள் அவிஜித் பதக், சப்ரி மித்ரா ஆகியோரின் வீடுகளிலும் கொள்ளை நடந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஜேஎன்யுவில் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள ‘சைக்கிளோப்ஸ்’ நிறுவனம் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது. இந்த நிறுவனத்துடன், ஜேஎன்யு நிா்வாகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT