புதுதில்லி

பறவைக் காய்ச்சல்: விரைவு நடவடிக்கை குழு அமைத்தது என்டிஎம்சி

DIN

புது தில்லி: தில்லியில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதியில் பறவைக் காய்ச்சலைக் கண்காணிக்கும் வகையில் விரைவு நடவடிக்கை குழுவை என்டிஎம்சி அமைத்துள்ளது.

இது தொடா்பாக என்டிஎம்சி சுகாதார அதிகாரி ரமேஷ் குமாா் கூறுகையில் ‘என்டிஎம்சி பகுதியில் பறவைக் காய்ச்சலை கண்காணிக்கும் வகையில் விரைவு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, என்டிஎம்சி பகுதியில் உள்ள கோழிகள், வாத்துக்கள், பிற நாடுகளில் இருந்து தில்லிக்கு வந்த பறவைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இது தொடா்பாக ஒவ்வொரு வாரமும் அக்குழு அறிக்கை சமா்ப்பிக்கும்.

நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், மத்திய அமைச்சா்கள், நீதிபதிகளின் வீடுகள் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய இடங்கள் என்டிஎம்சி பகுதியிலேயே உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT